search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிருடன் மீட்பு"

    • கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அரு கே உள்ள கணக்கம் பாளை யம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் செல்வராஜ் தனது வீட்டில் கொட்டி கிடந்த கல்லுக்குள் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அச்சமடைந்தார்.

    உடனே இது குறித்து கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கொட்டி கிடந்த கல்லுக்குள் பதுங்கி இருந்த சுமார் 4½ அடி நாகப்பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    துரிதமாக செயல்பட்டு நாகப்பாம்பை உயிருடன் மீட்ட முருகேசன், மாதப்பன், முருகன், கோபாலகி ருஷ்ண ன், தேவராஜ், மயி ல்சாமி, குருமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டி னர்.

    • வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.
    • நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த ரூபாநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது வீட்டில் பாம்பு நுழைந்ததால் வெங்கடாஜலபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வெங்கடாஜலபதி வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்பு காட்டில் விட்டனர். இதே போல, மங்கலம்பேட்டை அடுத்துள்ள பழையபட்டினம் கிராமம், முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது சாலிஹ் என்பவர் வீட்டின் சமையல் அறையில் புகுந்த 6அடி நீள நல்ல பாம்பை உயிருடன் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

    • காமராஜபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது.
    • விலங்குகள் நல ஆா்வலா் ஆமையை உயிருடன் மீட்டாா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில், தாராபுரம் சாலையிலுள்ள காமராஜபுரத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் பூங்கா உள்ளது. இதன் அருகில் இருக்கும் போா்வெல் குழிக்குள் ஒரு ஆமை விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

    இதனைப் பாா்த்த பொன்பிரபு என்பவா் வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தாா். விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜ் ஆமையை உயிருடன் மீட்டாா். பின்னா், காங்கயம் வனத் துறையினரின் அறிவுறுத்தல்படி, செம்மாண்டம்பாளையம் குட்டையில் ஆமை விடப்பட்டது. ஆமையை மீட்ட விலங்குகள் நல ஆா்வலரை பொதுமக்கள் பாராட்டினா். 

    • குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
    • கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.

    உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மல்லிகா கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார்.
    • அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் திருமால் நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மல்லிகா (47). இவரது வீடு அருகே 80 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 20 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இன்று அதிகாலை மல்லிகா இந்த கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென கிணற்றில் தவறி விழுந்தார்.

    இதைப்பா ர்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தத்தளித்து கொண்டு இருந்த மல்லி காவை கயிறு மீட்டு உயிர டன் வெளியே கொண்டு வந்தனர்.

    மல்லிகா கிண ற்றில் விழுந்த உடன் தீயணைப்புவீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து வந்து மல்லிகாவை மீட்டனர்.

    இந்த சம்பவம் காரணமாக அதிகாலை நேரத்திலேயே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் ரோடு மொண்டிப் புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 40). இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது வீட்டில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. சுமார் 80 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 10 அடிக்கு தண்ணீர் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை இவர் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனை ஒன்று எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.

    இதனையடுத்து சின்னச்சாமி உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    நிலைய அலுவலர் நவீந்தரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பூனையை உயிருடன் மீட்டனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
    • தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக திருவண்ணாமலை மா வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

    இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்த ப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் மீட்டனர். இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விருத்தாசலம் அருகே குட்டையில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டது.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்த ராஜதுரை (வயது.46), விவசாயி. இவருடைய பசு மாடு ஒன்று, மங்கலம்பேட்டையில், விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் குட்டையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் அய்யப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த பசு மாட்டினை உயிருடன் மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
    • தீயணைப்பு துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது50), விவசாயி. இவரது பசு மாடு அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து பழனிச்சாமி வேலாயுதம் பாளையம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்

    • கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது.
    • சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடைவீதி பின்புறமுள்ள சிதம்பரனார் வீதியில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழம் உடைய கிணறு உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில். கிணற்றுக்குள் இருந்து காப்பாற்றுங்கள் ,காப்பாற்றுங்கள், என சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, உள்ளே ஒருவர் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பல்லடம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து கயிற்றின் மூலம் அவரை மீட்டனர். பின்னர் பல்லடம் போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கோவை மாவட்டம் சூலூர் தாலுகா, வதம்பச்சேரி ஊராட்சி, நல்லூர் பாளையத்தைச் சேர்ந்த மவுனராஜ், (வயது 30) என்பதும், குடிபோதையில் நண்பரை தேடி வந்தவர், தொட்டி என நினைத்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிகிச்சைக்காக அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×